எப்படி இருக்கிறார் S.P.B.? – மருத்துவமனை அறிக்கை!

Share this News:

சென்னை (01 செப் 2020): பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிரபல பாடகர் எஸ்.பி.பியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு எஸ்.பி.பி-யின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதனை தொடர்ந்து எஸ்.பி.பி குறித்து பல வதந்திகள் வெளியாகின. இதனால் அவ்வப்போது அவரது மகன் வீடியோவின் மூலம் மக்களுக்கு எஸ்.பி.பி உடல்நிலை குறித்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்கள் கழித்து நேற்று மாலை மருத்துவ நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கோவிட்-19 தொற்று காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் இருந்து வருகிறார்.


Share this News:

Leave a Reply