சென்னை (01 செப் 2020): நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசே காரணம் என்பதை ஒருபோதும் மத்திய அரசு ஒப்புக்கொள்ளாது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 24 சதவீதம் சரிந்திருப்பது அவமானம் எனவும், மத்திய அரசு தனது தவறுகளை ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது எனவும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திரு.ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
இந்திய பொருளாதார மொத்த உற்பத்தி வளர்ச்சி, இதுபோன்ற ஆழமான பாதாளத்துக்கு செல்லும் என்பதை பிரதமரையும், நிதியமைச்சரையும் தவிர அனைவரும் அறிந்திருந்தனர் எனவும் திரு.சிதம்பரம் தெரிவித்துள்ளார்