சென்னை (31 ஆக 2020): பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்று இந்தியாவில் பெருமளவில் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக மூத்த தலைவரான இல.கணேசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.