பிரசாந்த் பூஷணுக்கு செம தண்டனை!

Share this News:

புதுடெல்லி (31 ஆக 2020): கோர்ட் அவமதிப்பு வழக்கில் பிரசாநத் பூஷணுக்கு ஒரு ரூபாய் தண்டனை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஹார்லி டேவிட்ஸன் பைக்கில் அமர்ந்தவாறு கடந்த ஜூன் மாதம் ஒரு புகைப்படம் எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து பிரசாந்த் பூஷண், முகக்கவசம், ஹெல்மெட் இல்லாமல் அமர்ந்த தலைமை நீதிபதி என்று டுவிட்டரில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் விமர்சித்தார். மேலும் நீதித்துறையின் செயல்பாடுகள் கடந்த 6 வருடங்களாக மாறி உள்ளதாகவும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்திருந்தார்

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனக்கூறி அவர் மீது உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என கடந்த 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் பிராசந்த் பூஷண் மன்னிப்பு கேட்க 3 நாட்கள் அவகாசத்தை நீதிபதிகள் அளித்தார்கள்.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கான ஒரு ரூபாய் அபாரதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு ரூபாயை செப்டம்பர் 15ம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் கட்டாமல்விட்டால் 3மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றவும் தடை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்துள்ளது


Share this News:

Leave a Reply