திருச்சி (19 ஏப் 2020): கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால்மதுபான கடைகள், பார்கள் , டாஸ்மாக் போன்றவை மூடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், மதுவுக்கு அடிமையாகி இருக்கும் பலரும் பல்வேறு இடங்களில் கள்ளச் சாராயம் மற்றும் வீட்டிலேயே மதுபானம் தயாரிக்கும் நிலைமையை எட்டியுள்ளனர்.
இது இப்படியிருக்க திருச்சியில் உள்ள எடமலைப்பட்டி புதூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி ஒருவர் ராம்ஜி நகர் பகுதியில் கபசுரக் குடிநீர் என்று கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து வந்துள்ளார் 65 வயதான அந்த மூதாட்டி குடிநீர் விற்பனை செய்யும் கள்ளச்சாராயத்தை கூற்றி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சிலர் சானிடைஸர் குடித்து பலியாகியதும், சிலர் டாஸ்மாக் கடைகளை உடைத்து உள்ளே இருந்து மதுபான பாட்டில்களை திருடிச் செல்கின்றதும் குறிப்பிடத்தக்கது.