அறிகுறிகள் இல்லாத கொரோனா பாஸிட்டிவ் – மருத்துவத் துறைக்கு தொடரும் சவால்கள்!

Share this News:

புதுடெல்லி (19 ஏப் 2020): அறிகுறிகள் எதுவும் இல்லாமல் தற்போது அதிகமாக கொரோனா பாஸிட்டிவ் என தகவல்கள் வருவது மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் நாடு தழுவிய அளவில் தலைநகர் டெல்லி 2-வது இடத்தில் உள்ளது. அங்கு ஆயிரத்து 893 பேருக்கு நோய்த்தொற்று உள்ளது. 43 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், தற்போதைக்கு ஊரடங்கை தளர்த்தும் எண்ணம் இல்லை என தெரிவித்தார். நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 186 பேருக்கும் எந்த வித அறிகுறிகளும் தென்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலையும் திரு.கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பாதிப்பு இல்லாததால் வீடு திரும்பிய இளைஞருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்துதல் காலம் முடிந்தபின் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.

இதனால், மருத்துவ நிபுணர்களுக்கு கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதில் புதுப்புது சவால்கள் எழுந்துள்ளன.


Share this News:

Leave a Reply