சென்னை (24 பிப் 2021): வி.கே சசிகலாவை முக்கிய அரசியல் பிரபலங்கள் சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள சசிகலா இல்லத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்தார். அதேபோல், திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரமும், கட்சிகளுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையும் சூடுப்பிடித்துள்ள நிலையில், சசிகலாவை சரத்குமார், சீமான் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த சந்திப்புகளால் எடப்பாடி தரப்பினர் கலக்கம் அடைந்துள்ளனர்.