சென்னை (22 ஜூலை 2020):கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மாரிதாஸ் ‘ஊடகத்துறையை’ பற்றி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நியூஸ் 18 சேனலில் திமுக கொள்கையுடையுவர்கள் இருக்கிறார்கள். அது திமுகவிற்கு சார்பாக செயல்படுகிறது. ஆகவே நியூஸ் 18 சேனல் நடுநிலை ஊடகம் கிடையாது என்று பேசினார்.
அதற்கு அவர் ஆதாரமாக முன்வைத்ததுதான் மிகவும் கேலிக்குறியது. நியூஸ் 18 சேனலின் சீனியர் எடிட்டராக உள்ள குணசேகரன் திமுக ஆதரவாளர். அதற்கு ஆதாரம் அவரது மாமனார் தி.க.-வைச் சேரந்தவர் என்று பேசியிருக்கிறார்.
சுத்தமாக வடிகட்டிய அடிமுட்டாள்களின் வாதம்தான் இந்த வாதம். மாமனார் தி.க.-வாம். அதனால் அவரும் தி.க. சார்புடையவராகத்தான் இருப்பாராம். எவ்வளவு அபத்தமான வாதம். சிறிதளவு அறிவு இருப்பவர்கூட இது போன்ற வாதத்தை முன்வைக்கமாட்டார்கள்.
இந்த அறிவார்ந்த(?) வாதத்தை கேட்டவுடன் சில பக்த கோ
டிகள் ஆஹா..ஓஹோவென்று.., துதி பாட.., உடனே மாரிதாசுக்கு உசுப்பேற… நியூஸ் 18 சேனலுக்கு மெயில் அனுப்புங்கள் என்று கோரிக்கை வைத்தார். பக்த கோடிகளால் மெயில் அனுப்பப்பட்டது. முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்பட்டது.
இதையெல்லாம் பார்த்து மிரண்டு போன நியூஸ் 18 சேனல் தனது ஊடகத்தின் சீனியர் எடிட்டராக இருந்த குணசேகரன் அவர்களை பதவியிறக்கம் செய்திருக்கிறது.
அறிவற்றவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து, நேர்மையாக பணியாற்றிவர்களை பதிவியிறக்கம் செய்திருக்கிறது நியூஸ் 18. இதனால் குணசேகரன் போன்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை விட அந்த ஊடகத்திற்குதான் அதிக பாதிப்பு.
அடிமுட்டாள்களின் மிரட்டல்களுக்கு ஒரு ஊடகம் அடங்கி போவதா? அதுவும் தமிழகத்திலா? என்று எண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகின்றது.
யார் இந்த குணசேகரன்..?
2017 ம் ஆண்டில் ஓகி என்ற புயல் இந்தியாவை கடுமையாக தாக்கியது. அதில் 200 மீனவர்கள் காணாமல் போயினர். 30 பேர் இறந்தனர். படகுகள் மற்றும் வீடுகள் கடும் சேதத்திற்கு உள்ளாயின. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் கடும் இழப்பை சந்தித்தது.
அந்த சமயத்தில் குணசேகரனும் அவரது குழுவினரும் களத்தில் இறங்கி வேலை செய்தனர். ஆபத்தான சூழ்நிலையை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று தகவல் சேகரித்தனர். சூறாவளியால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து ஒரு மணி நேர ஆவணப் படத்தை தயாரித்தனர்.
குணசேகரன் நெறியாளராக இருந்து நடத்தி வந்த ‘காலத்தின் குரல்’ எனும் நிகழ்ச்சி, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் விரக்தியை வெளிக்கொணர்ந்தது.
குணசேகரனின் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக பிராந்திய ஊடகத்திற்காக வழங்கப்படும் ‘ராம்நாத் கோயங்கா சிறப்பு பத்திரிகையாளர் விருது’ இவருக்கு வழங்கப்பட்டது. தமிழக ஊடகவியலாளர்களில் இந்த விருதை பெற்றவர்களில் குணசேகரன்-தான் முதலாமவர்.
இவ்வாறு நியூஸ் 18 சேனலின் மதிப்பை உயர்த்த பாடுபட்ட குணசேகரனையே இன்று பதவியிறக்கம் செய்திருக்கிறது நியூஸ் 18 நிர்வாகம்.
இந்த சம்பவம், ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறை,வட இந்தியா-வை ஆட்டுவித்துவிட்டு, தென்னிந்தியா-வின் மூச்சாக இருக்கக்கூடிய தமிழகத்தையும் தற்போது குறி வைத்து தாக்குகின்றதா..? இதனால் மொத்த ஊடகத்துறையும் காவி மயமாக்கப்படுகிறதோ எனும் அச்சத்தை பொதுநலன் நாடும் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.