இந்து இந்துகோயில் இடிப்பு – இ.யூ.முஸ்லிம் லீக் கண்டனம்!

Share this News:

சென்னை (02 ஜன 2021): பாகிஸ்தானில் இந்து இந்துகோயில் இடிக்கப்பட்டதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“பாகிஸ்தானில் 97 வடி சதவீதம முஸ்லிம்கள், 3 சதவீதம் மக்களே இந்து, சீக்கிய சிறுபான்மையினர். பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர் கொடுமைப்படுத்தப்பட்டு, வெளியேற்றப்படுகிறார்கள். என்பதால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது என்று இந்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அந்த குற்றச்சாட்டை உண்மையாக்கும் வகையில் இந்து கோயில் எரிப்பும் சேதமும் அமைந்திருக்கிறது.

பெரும்பான்மையினரின் பெருமையே, தங்கள் மத்தியில் வாழும் சிறுபான்மையினரைப், பேணிப் பாதுகாப்பதில் தான் இருக்கிறது என்பதை பாகிஸ்தான் முஸ்லிம்கள் உணர வேண்டும்.
திருக் குர் ஆனும் திருநபி போதனையும் தெளிவாகக் கூறுகிறது. இஸ்லாம் என்பது பிற மதங்களுடன் மோதுவதல்ல; எல்லா மதங்களுடன் அரவணைத்துச் செல்வதே ஆகும். இதனை இந்து கோயிலை சேதப்படுத்திய வழி தவறிய கூட்டத்தினர் புரிய வேண்டும்.பாகிஸ்தான் அரசு, இந்து கோயிலை சேதப் படுத்தியவர்களைக் கடுமையாகக் கண்டித்ததுடன் 26 பேரைக் கைது செய்திருக்கிறது.

இது மிகுந்த வரவேற்குரியதாகும். சேதப்படுத்தப்பட்ட கோயிலை உடனடியாகப் பழுது பார்த்து, புதுப்பித்து இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் நற் காரியத்தை பாகிஸ்தான் அரசு துரிதமாகச் செய்ய வேண்டும்.

1947 ஆகஸ்ட் 15 லும் அதற்கு முன்னரும் இருந்து வரும் அனைத்து வணக்கத் தலங்களும், கோயில்களும் மஸ்ஜிதுகளும், சர்ச்சுகளும், பகோடாகளும், குருதுவாராகளும், சினகாகுகளும் பாதுகக்கப்படும் என்று 1991 ஆம் ஆண்டு இந்தியாவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அது நடைமுறையில் இருந்து வருகிறது. அதைப் போன்ற ஒரு சட்டத்தை பாகிஸ்தான் அரசும் நிறைவேற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டு கொள்கிறோம்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *