குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

Share this News:

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய கட்டடம் 2 வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் கலந்து கொள்ள அனைத்து இஸ்லாமிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் “நீங்கள் அனுப்பிய கடிதத்திற்கு நன்றி, அதேவேளை இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமானது போல் தோற்றத்தை அந்த கடிதம் ஏற்படுத்துகிறது. இது முற்றிலும் தவறானது. இது ஒட்டு மொத்த இந்தியர்களுக்கு எதிரான சட்டம். எனவே இது தொடர்பாக அனைத்து கட்சி கூடம் நடைபெற வேண்டும், அதில் விவாதிக்க வேண்டும் அதன் மூலம் நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டதிற்கான முயற்சிகளை செய்யுங்கள்.” என்று பதிலளித்துள்ளார்.


Share this News:

Leave a Reply