ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட ஊர்வலங்களுக்கு தமிழக அரசு அனுமதி மறுப்பு!

சென்னை (29 செப் 2022): தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்திருந்த ஊர்வலங்களை தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்த்துள்ளது. மேலும் ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்…

மேலும்...

பள்ளிகளை திறக்கலாமா? – பெற்றோர்களை அணுக தமிழக அரசு முடிவு!

சென்னை (01 ஜூன் 2020): பள்ளிகளை திறந்தால் பிள்ளைகளை பெற்றோர் பள்ளிகளுக்கு அனுப்புவார்களா? என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் மற்றும் தற்போதைய கொரோனா சூழலில் பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமாக இருக்காது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஜூன், 15 முதல் 25 வரை தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடக்கிறது. தேர்வு முடிந்த பின், ஜூலை மாதத்தில் தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்படும். அதன்பின் அப்போதைய…

மேலும்...

டாஸ்மாக் மூடல் – திறப்பதற்காக உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு!

சென்னை (08 மே 2020): தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.இதனால் பல இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். இதையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுக்கடைகளை திறந்தது ஆபத்தானது எனவும், உயர் நீதிமன்றத்தின் விதிமுறைகள் மதுக்கடைகளில் பின்பற்றப்படவில்லை எனவும் கோரி மக்கள் நீதி…

மேலும்...

நோன்பு கஞ்சிக்கு அரசு அரிசி வழங்கக்கூடாது – இந்து முன்னணி நீதிமன்றத்தில் மனு!

சென்னை (24 ஏப் 2020): நோன்பு கஞ்சிக்காக அரிசி வழங்குவதை அரசு நிறுத்தக்கோரி இந்து முன்னணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப் பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு நாளை முதல் இந்தியா முழுவதும் தொடங்குகிறது. இந்நிலையில், கடந்த 16 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய தமிழக அரசு, கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் என தெரிவித்தது. அதன்படி, 2895 பள்ளிவாசல்களுக்கு 5440 மெட்ரிக் டன்…

மேலும்...

குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல – தலைமை செயலருக்கு முஸ்லிம் லீக் பதிலடி!

சென்னை (13 மார்ச் 2020): குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டி இந்திய யூனியன் முஸ்லிம்லீக், தலைமை செயலருக்கு கோரிக்கை வைத்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்க இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக தலைமை செயலர் அழைப்பு விடுத்திருந்தார். அதில், குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கும் விதமாக வரும் 14 மார்ச் 2020 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், தமிழக தலைமை செயலகம் பழைய…

மேலும்...

பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் செல்ல தேவையில்லை!

சென்னை (10 பிப் 2020): “பட்டா மாற்றம் செய்ய இனி தாலுக்கா அலுவலகம் சென்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை!” என்று வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவு முடிந்தவுடன் பட்டா பெயர் மாற்றுவதற்கு படிவத்தை வருவாய்த்துறைக்கு அனுப்ப வேண்டும். இதற்கான ஒப்புகை சீட்டு எண் பொதுமக்களிடம் அளிக்கப்படுகிறது. அதை வைத்து பொதுமக்கள் பட்டா பெயர் மாறுதல்…

மேலும்...

இவ்வருட பொங்கலுக்கு செம்ம பிஸினஸ் – எதில் தெரியுமா?

சென்னை (19 ஜன 2020): இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது….

மேலும்...

மிரட்டிய ஸ்டாலின் – பணிந்த எடப்பாடி!

சென்னை (16 ஜன 2020): இவ்வருடம் பெரியார் விருது இதுவரை அறிவிக்காதது காரணம் ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் உடனே பெரியார் விருதை அறிவித்துள்ளது தமிழக அரசு. தந்தை பெரியார் விருது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (புதன்கிழமை) மாலை சமூக வலைதலங்களில் கேள்வி எழுப்பியிருந்தார். அதில், “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது 2019, யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முன், சொந்தக்…

மேலும்...