கொரோனா – கேரள முதல்வரின் திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்: ஜவாஹிருல்லா!

Share this News:

சென்னை (21 மார்ச் 2020): கொரோனாவை எதிர் கொள்ள கேரள முதல்வர் பிணராயி விஜயன் அறிவித்துள்ள திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில், “மார்ச் 22 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்துள்ள சுய ஊரடங்கு உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இறைவனிடத்தில் தொழுது அனைவரும் பிரார்த்திப்போம்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் நடுத்தர மக்களின் நலனில் அக்கறை கொண்டு கேரள முதல்வர் பிணராயி விஜயன் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அந்த வரவேற்கத்தக்க திட்டங்களை தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். மேலும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களின் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசும் நல திட்டங்களை அறிவிக்க வேண்டும். கொடிய கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க ஐவேளை தொழுகையிலும் இறைவனை பிரார்த்திப்போம் ” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply