ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (11 பிப் 2020): ஜாமியா மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்சிஆர், சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாக சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூர தாக்குதல் நடைபெற்று உள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் .
இந்த போராட்டத்தில் பங்குக் கொண்ட மாணவிகள் மீது மிக மோசமான முறையில் குரூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்கள் மீதான இந்த தொடர் தாக்குதல். மத்திய பாஜக அரசின் மாணவர் விரோதப் பாசிசப் போக்கையே காட்டுகிறது .

மாணவர்களின் மீது நடத்தப்படுகின்ற இது போன்ற பாசிச கொடூர தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply