நடிகை ஜோதிகா செய்த மகத்தான உதவி – அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு!

Share this News:

தஞ்சாவூர் (08 ஆக 2020): நடிகை ஜோதிகா ஏழைத் தாய்மார்கள், குழந்தைகள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார்.

இந்நிலையில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். மேலும் மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்களையும் ஜோதிகா வழங்கி உள்ளார்.

ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஜோதிகாவின் உதவி மருத்துவர்கள் அமைச்சர், கலெக்டர், மருத்துவத்துறை அதிகாரிகள் எனப் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.


Share this News:

Leave a Reply