சென்னை (14 மார்ச் 2021): சீட் கிடைக்காத திமுக பிரமுகர்களை பாஜக பக்கம் இழுக்க அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவாக இருக்கும் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பாஜக பக்கம் தாவுவது வழக்கமாகி வருகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ இதுவே காரணமாக அமைந்தது.
இதனை தமிழகத்திலும் நிறைவேற்ற பாஜக முயன்று வருகிறது. இதற்கு வலுவாக இருக்கும் திமுகவை குறி வைத்து அமித் ஷா காய் நகர்த்தி வருகிறார்.
திமுகவில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் பெயர் இல்லாத முக்கிய புள்ளிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களை தங்களுக்கு சாதகமாக்க பாஜக முயன்று வருகிறது.
இந்த துண்டிலுக்கு தற்போது பலியாகியிருப்பவர் திருப்பரங்குன்றம் திமுக எம்.எல்.ஏ சரவணன். அவரை தன் பக்கம் இழுத்த பாஜக இனி பலரை தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இது திமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.