மோடியை மீண்டும் சீண்டிய கமல்!

Share this News:

சென்னை (15 ஏப் 2020): மும்பையில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல், மோடி அரசையும் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மோடி சமீபத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நன்றி கூறும் விதமாக வீட்டின் முகப்பில் நின்று கைத்தட்டச் சொன்னார். பால்கனியில் அகல் விளக்குகளை ஏற்றி வைத்து ஒற்றுமையை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கமல்ஹாசன் மோடி அரசை பால்கனி அரசு என விமர்சித்திருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மும்பையில் வெளிமாநிலங்களில் இருந்து தங்கியவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

இந்நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், “பால்கனியில் உள்ள அனைவரும் தரையில் உள்ளவர்களை கவனிப்பது இல்லை. முதலில் டெல்லி, இப்போது மும்பை. புலம்பெயர்ந்தோர் நெருக்கடி என்பது வெடிகுண்டு மாதிரி. அது கொரோனாவை விட பெரிய ஆபத்தானது. அந்த நெருக்கடி விபரீதமாக மாறும் முன்பு அதைத் தடுக்க வேண்டும். பால்கனி அரசாங்கம் தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சாடியுள்ளார்.


Share this News:

Leave a Reply