காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாஸிட்டிவ் – பீதியில் முதல்வர் மற்றும் எம்.எல்.ஏக்கள்!

Share this News:

அஹமதாபாத் (15 ஏப் 2020): குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, உள்துறை அமைச்சர் மற்றும் மூன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் செவ்வாயன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை அடுத்து இவர்களை சந்தித்த ஆறு மணி நேரத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ., இம்ரான் கெதாவாலாவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து காந்தி நகர் SVP மருத்துவமனையில் இம்ரான் கொதாவாலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனையில் சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப் பட்டபோதும், முதல்வர், எம்.எல்.ஏக்கள் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் இம்ரான் கெதாவாலாவுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர்.

குஜராத்தில் 617 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளனர். 55 பேர் வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர்.


Share this News:

Leave a Reply