கொரோனாவோடு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது ஏன் – கமலுக்கு சுகாதாரத்துறை கேள்வி!

சென்னை (07 டிச 2021): கொரோனா சிகிச்சைக்குப்பின் நேரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனது குறித்து கமலுக்கு சுகாதாரத்துறை விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பவுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருக்கிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கமுடியாத நிலை ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் கமல்ஹாசன், சில…

மேலும்...

இந்தியன் 2 படத்தில் நடிகர்கள் அதிரடி மாற்றம்!

சென்னை (15 நவ 2021): இந்தியன் 2 படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் இரண்டு மாற்றங்கள் நிகழவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்து கலக்கியிருந்த இதன் இரண்டாம் பாகம் மீண்டும் கமல் நடிக்க விபத்து காரணமாகவும், தயாரிப்பு தரப்பு காரணமாகவும் படபிடிப்பு தடை பட்டிருந்தது. தற்போது ஷங்கர் ராம்சரன் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தியன் 2…

மேலும்...

சதிகாரர்களுக்கு இடமில்லை – கமல்!

சென்னை (27 ஜூன் 2021): மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, புதிய நிர்வாகிகளை அதன் தலைவர் கமலஹாசன் அறிவித்துள்ளார். ஏற்கனவே “மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த, தேவையான மாற்றங்களைச் செய்வேன்!” என கடந்த மே 24ஆம் தேதி வீடியோ வாயிலாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (26.06.2021) இணையவழி கலந்துரையாடலில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், ”நம்மைப் படகாக்கி தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்ள விரும்பும் சதிகாரர்களுக்கு…

மேலும்...

கமல் சீமான் கட்சிகளின் வாக்குகளால் யாருக்கு பாதகம்? – சர்வேயில் இறங்கிய பாஜக!

சென்னை (15 ஏப் 2021): 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு நேரடி போட்டி இருந்தாலும் வாக்குகளை கணிசமான அளவில் சீமான் கட்சியினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் வாக்குகளை பிரித்துள்ளனர். இதனால் டெல்லியின் கவனம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் மீது தொடர்ந்து உள்ளது. அதன்படி, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உளவுத்துறை அனுப்பிய…

மேலும்...

இப்படி பேசிடுச்சே அந்த பொண்ணு – சீறிய கமல்!

சென்னை (31 மார்ச் 2021): விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது.. பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து…

மேலும்...

பிரச்சாரத்தின்போது கமலை கிண்டலடித்த ரசிகர் மீது கமல் காட்டம்!

கோவை (21 மார்ச் 2021): கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசனை கிண்டலடிக்கும் வகையில் கேள்வி கேட்ட ரசிகர் மீது கமல் கடும் கோபமாக பேசினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், நேற்று கோவை மாவட்டம், பீளமேட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர் அவரை சதிலீலாவதி படத்தில் வரும் கோவை பாஷையில் பேசுமாறு கேட்டார். அதற்கு கமல்ஹாசன், “நான் இங்கு நடிக்க வரவில்லை. உங்களுக்கு அதுதான் வேண்டுமென்றால், யூடியுபில் அந்த சினிமா…

மேலும்...

பிக்பாஸ் தமிழில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விட்ஸ்ட் !

சென்னை (13 ஜன 2021): பிக்பாஸ் தமிழ் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஒருவர் வெளியாகியுள்ளார். பிக்பாஸ் தமிழ் 4 நேற்றோடு 100 நாட்கள் முடிந்துவிட்டது, வரும் ஜனவரி 17ம் தேதி இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அந்நாளில் பிக்பாஸ் 4வது சீசனின் வெற்றியாளர் யார் என்பது மக்களுக்கு தெரிந்துவிடும். இந்த நிலையில் தான் நிகழ்ச்சி குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது பிக்பாஸில் இறுதி நாட்களுக்கு முன் குறிப்பிட்ட தொகை கொடுத்து…

மேலும்...

லைட் அடிச்சு பார்க்க ஆசை – கமல் விருப்பம்!

சென்னை (27 நவ 2020): தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட டார்ச்லைட் சின்னத்தையே ஒதுக்க வேண்டும்,’ என தேர்தல் ஆணையத்தில் மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு, ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். அதன் பிறகு நடந்த தேர்தல்களில் போட்டியிட, அக்கட்சிக்கு டார்ச்லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, இக்கட்சி தயாராகி வருகிறது….

மேலும்...

பிரபல நடிகர் மீது 4 வழக்குகள் – பரபரப்பை கிளப்பிவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்த நடிகை!

சென்னை (05 அக் 2020): நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான தர்ஷன் மீது 4 வழக்குகளை கொடுத்துவிட்டு பிக்பாஸுக்குள் நுழைந்துள்ளார் நடிகை சனம் ஷெட்டி. தமிழ் பட நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டியும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் தர்ஷனும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டதாக சனம் கூறியுள்ளார். ஆனால் தர்ஷன், சனம் ஷெட்டியை திருமணம் செய்வதாக கூறி மறுத்துவிட்டதாக கடந்த வருடம் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் நேற்று தொடங்கிய பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டியும்…

மேலும்...

பிக்பாஸ் 4 தமிழ் – போட்டியாளர்கள் பெயர் பட்டியல்!

சென்னை (31 ஆக 2020): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர் பார்ப்பு எகிரியுள்ளது. போட்ட்டியாளர்களாக, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், அனுமோகன், நடிகை பூனம் பாஜ்வா, வனிதா சர்ச்சைப் புகழ் சூர்யா தேவி, ஷனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், கலக்கப்போவது யாரு புகழ், சூப்பர்…

மேலும்...