சென்னை (13 மே 2020): வாணியம்பாடியில் கடைகளை ஆய்வு செய்ய சென்ற நகராட்சி ஆணையர், வியாபாரிகளின் பழங்களை வீதியில் வீசிய சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இநிலையில் நகராட்சி ஆணையரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேபோல திமுக எம்.பி கனிமொழியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது.
“வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார்.. 1/2 pic.twitter.com/dneJFhX5sR
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 12, 2020