சென்னை (24 பிப் 2020): பரங்கிப்பேட்டை கலீல் பாகவீக்கு தென்னிந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
சென்னை கமலாலயம் அறக்கட்டளை, சென்னை கலாமின் கனவு அறக்கட்டளை மற்றும் கோவை உயிர் தளிர் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து “தென்னிந்திய சாதனையாளர் விருது – 2019” வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (23.02.2020) காலை சென்னையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக சென்னை மாநகர முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமி அவர்கள் கலந்து கொண்டு பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ உள்ளிட்ட சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
குவைத்திலும், தமிழகத்திலும் சமூக, சமய, கல்வி, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டுவரும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் பொதுச் செயலாளர் பரங்கிப்பேட்டை மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்களுக்கு “தென்னிந்திய சாதனையாளர் விருது – 2019” வழங்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு விருதுகள் பெற்றவர் இவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது குறித்து நமது செய்தியாளரிடம் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சுருக்கமாகச் சொன்னார் கலீல் பாகவி.
இவ்விழாவில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று சாதனையாளர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினர்.