சென்னை (08 மே 2021): “திமுக அரசின் உத்தரவுகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்” என்று நடிகையும் பாஜகவில் சமீபத்தில் இணைந்தவருமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில் கூறி இருப்பதாவது:-
“தமிழக மக்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும். கொரோனோவுக்கு எதிரான போரில் அரசால் மட்டும் எல்லாவற்றையும் செய்ய முடியாது. மக்களின் பங்கும் முக்கியமானது. நம்மால் முடிந்த ஒத்துழைப்பை நாம் அளிப்போம். சிறு துளி பெருவெள்ளமாகும்!” என்று கும்பிட்ட கை போட்ட எமோஜியுடன் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை குஷ்பூ திமுகவிலிருந்து, காங்கிரஸ் பின்பு திடீரென பாஜகவில் இணைந்து சமீபத்திய தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
I urge people of TN to please help the Govt of Shri @mkstalin Avl to fight #covid19 Remember it cannot be done alone by the govt, we play a vital role too. Let’s do our bit. Every drop makes an ocean. 🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) May 8, 2021