தஞ்சாவூர் (05 ஜூன் 2020): உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், மேலக்காவேரி பகுதியில் “சுற்றுச்சூழலை நேசிப்போம் பாதுகாப்போம் “என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
முஹம்மது யூனுஸ் தலைமை தாங்கினார். கவிஞர் மு அய்யூப்கான் வரவேற்று பேசினார். “சுற்றுசூழல்களை நேசிப்போம் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற ஆசிரியர் அப்துல்காதர், மு.அப்துல்அஜீஸ் ,பயாஸ் அஹமது ,பொறியாளர்.மைதீன் பாட்ஷா உட்பட பலரும் பேசினார்கள்.
நிகழ்ச்சியை ஒட்டி மரக்கன்றுகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு உரையும், மரப்பிள்ளைகளும் நடப்பட்டன. மேலும் நிகழ்வில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மைதீன் பாட்ஷா, ஹாஜாமைதீன், சித்திக், ஜாபர், பாபு, இக்பால், மாணவர்கள் சின்னமணி, அ.அப்துல்லாஹ் உட்பட பலரும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை “மிஸ்வா” (MISWA)அமைப்பினர் செய்திருந்தார்கள். ஜாபர் சாதிக் அலி நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.