சென்னை (08 டிச 2022): வங்கக்கடலில் உருவானது மாண்டஸ் புயல். இது சென்னைக்கு தென்கிழக்கே 640 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
வங்க கடலில் உருவாக உள்ள மாண்டஸ் புயல் (Cyclone Mandous) தமிழத்தில் இன்று முதல் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் புயல் சின்னத்தால் கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் புதுச்சேரிக்கும் ஶ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை நள்ளிரவில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.