சென்னை (08 டிச 2022): சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதளல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் உதவித் தொகையை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வழங்கப்பட்ட கல்வித் தொகை நிறுத்தப்பட்டதால் ஐந்தரை லட்சம் சிறுபான்மை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.