முடிவுறும் தருவாயில் மல்லிப்பட்டினம் மனோரா சிறுவர் பூங்கா பணிகள்!

Share this News:

பட்டுக்கோட்டை (29 ஜூலை 2022): தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த மனோரா சுற்றுலா தளத்தின் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது.

மனோரா மல்லிப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. இங்கு பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கி.பி 814ல் மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் விழ்த்தியதன் நினைவாக ஆங்கியர்களின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி, நினைவு சின்னமாக கட்டியதுதான் மனோரா.

சித்திலமடைந்த மனோராவில் மராமத்து பணிகள் நடைபெற்றதால் 5 வருடங்களாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. கடந்த 2 மாதங்களாக அனுமதி வழங்கப்பட்டுவருக்கிறது.

இந்நிலையில் இங்கு ரூ 33 லட்சம் செலவில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. இது தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.

இதனை தஞ்சை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *