சென்னை(17 பிப் 2020): சென்னை வண்ணாரப்பேட்டை ஷஹீன் பாக் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது.
Couple get married at thr #ChennaiShaheenBagh protest in #washermanpet. The couple decided to get married at the protest venue as all their relatives and friends are in #CAAProtest pic.twitter.com/35eckbWGlx
— Mugilan Chandrakumar (@Mugilan__C) February 17, 2020
இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் ஒரு இளம் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமண நிகழ்வில் மணமக்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். கையில் சி.ஏ.ஏவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்தத் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.