இஸ்லாமாபாத் (17 பிப் 2020): பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 23 பேர் கடந்த மாதம் இஸ்லாமாபாத் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் ஜாமீன் மீதான மனு விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா பிறப்பித்த உத்தரவில், 23 பேர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்ததோடு, அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் போராட்டம் செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கு இஸ்லாமாபாத் போலீஸை கடுமையாக விமர்சித்தார். அப்போது, போராட்டம் நடத்தினால் தேசிய பாதுகாப்புசட்டம் பாய, “இது இந்தியாவல்ல பாகிஸ்தான்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் போராட அனைத்து உரிமைகளும் உள்ளன. என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் போராட்டக்காரர்களிடம், பேசிய நீதிபதி, “நீங்கள் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று போராட வேண்டும், ஒருவேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றம் உள்ளது அவர்கள் அனுமதிப்பார்கள்” என்றார்.