உத்தர்காண்டில் வரலாறு காணாத நிலச்சரிவு – பக்தர்கள் அவதி!

Share this News:

டேராடூன் (24 செப் 2022): உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வெள்ளியன்று மலையின் பெரும் பகுதியில் நிலைசரிவு ஏற்பட்டு, மண், பாறைத் துண்டுகள் மற்றும் தூசிகள் பரவும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஆதி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய பாதை மூடப்பட்டது.

வெள்ளிக்கிழமை மாலை நஜாங் தம்பா கிராமத்திற்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டு தேசிய நெடுஞ்சாலையை மூடியதால் ஆதி கைலாஷ் யாத்ரீகர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் தவாகாட் அருகே சிக்கித் தவித்ததாக ANI தெரிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் செப்டம்பர் 25-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பல நெடுஞ்சாலைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகள் குப்பைகளால் குவிந்துள்ளன.

உத்தரகாசியில் உள்ள ஹெல்குகாட் மற்றும் ஸ்வரிகாட் அருகே மலைகளில் இருந்து பாறைகள் மற்றும் கற்கள் விழுந்ததால் ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை தடைப்பட்டது. டேராடூன் மாவட்டத்தில் உள்ள விகாஸ் நகர்-கல்சி-பர்கோட் தேசிய நெடுஞ்சாலையும் தடைபட்டுள்ளதாக மாநில அவசரகால செயல்பாட்டு மையம் (எஸ்இஓசி) தெரிவித்துள்ளது.

டேராடூனில், நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.தலைநகர் சந்திரபானி சோய்லா மற்றும் சிம்லா பைபாஸ் உள்ளிட்ட இடங்களிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


Share this News:

Leave a Reply