மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பால் விலை உயர்வு!

Share this News:

சென்னை (20 ஜன 2020): தனியார் பால் நிறுவனங்கள் நாளை முதல் பால் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.

பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணங்களால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தனியார் பால் கொள்முதல் மற்றும் விற்பனை நிறுவனங்கள் அறிவித்துள்ளது. ஆனால் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தினாலும் தங்களுக்கு அதில் லாபம் எதுவும் கிடைப்பதில்லை என மாட்டு உரிமையாளர்கள் மற்றும் சில்லரை பால் விற்பன்னர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பால் விலை உயர்வோடு தனியார் பால் பொருட்களான தயிர், வெண்ணெய், பாலாடை கட்டி, பன்னீர் போன்ற பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply