சென்னை (27 ஜூன் 2021); டிவிட்டரில் ஒரு பெண் வைத்த கோரிக்கையை உடனடியாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியில் வசிக்கும் ஜோசபின் ரம்யா என்னும் இளம்பெண் அவரது ட்விட்டர் பதிவில் தனது தோழியின் சகோதரி உயிரிழந்து விட்டதால் உடனடியாக அவரது பெற்றோர்களை அமெரிக்கா அனுப்பி வைக்க உதவி செய்ய வேண்டும் என்று கூறி அமைச்சர் செஞ்சி மஸ்தானை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைக் கண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான், அந்தப் பெற்றோரின் விவரங்களை இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்து உடனடியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். ட்விட்டரில் விடுத்த கோரிக்கையை ஏற்று உடனடி நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.