கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Share this News:

சென்னை (20 ஜன 2021): தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் கொள்கிறேன்.

ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக, ஐ எம் ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்.

மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில் நானே கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள உள்ளேன்” என்று தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply