சென்னை (29 ஏப் 2020): சென்னையில் இன்று (புதன்கிழமை) மட்டும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று வரை 2 ஆயிரத்து 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்று மேலும் 104 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 162 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 94 பேருக்கும், செங்கல்பட்டில் 4 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 3 பேருக்கும், திருவள்ளூரில் ஒருவருக்கும், விழுப்புரத்தில் இருவருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் மேலும் 94 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 82 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்து 210 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.