சென்னை (21 ஆக 2020): உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைவில் வீடு திரும்புகிறார்.
நல்லகண்ணுக்கு நேற்று இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவருடைய பேரன் நள்ளிரவிலேயே அவரை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தார்.
மேலும், இன்று காலை அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத் தொற்றும் இல்லை என்று தெரிந்தது.
இந்தச் செய்தி அவரது கட்சி தொண்டர்கள் உட்பட தமிழக மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தொடர்ந்து அவர் மருத்துவப் பரிசோதனைகள் செய்துவருகிறார். இன்று பகலுக்கு மேல் அவருக்கு காய்ச்சல் குணமாகிவிட்டது. லேசாக சளி இருப்பதால் இன்னும் ஓரிரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டியது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.