நீட் தேர்வு ஒத்தி வைப்பா? – மத்திய அமைச்சகம் பதில்!

Share this News:

புதுடெல்லி (21 ஆக 2020): நீட் மற்றும் ஜே.இ.இ.தேர்வுகளை ஒத்தி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று மத்திய அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையரையின்றி மூடப்பட்டுள்ள நிலையில் கடந்த மே மாதமே நடைபெற இருந்த நீட் தேர்வு கரோனா காரணமாக ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செப்டம்பர் 13 அன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதேபோல ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கல்வி நிலையங்களின் தொடர் முடக்கம், தேர்வு மையத்தின் பாதுகாப்பு குறித்த அம்சங்கள், தேர்வு நேரத்திலான போக்குவரத்துக்கு வசதிகள் உள்ளிட்டவை குறித்துப் பல தரப்பினரும் கவலை தெரிவித்து வந்தனர்.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் கொரோனா தீவிரமாக இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் அமித் காரே, ‘நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை. திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். உச்ச நீதிமன்றமும் இதுதொடர்பான வழக்கில் தெளிவான தீர்ப்பினை வழங்கியுள்ளது’ என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply