கோவை ஈஷா மையத்தின் உண்மை முகம் – பாதிக்கப் பட்ட பெண்ணின் தாய் பகீர் தகவல்(வீடியோ)

Share this News:

கோவை ஈஷா மைய‌ம் குறித்து அவ்வப்போது பதற வைக்கும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான வீடியோ ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

அப்போதே பலர் அந்த மைய‌ம் குறித்தும் சத்குருவின் மோசடிகளை வெளியே கூறியபோதும் சத்குரு அவரது செல்வாக்கை பயன்படுத்தி யோகா மையம் குறித்த எந்த மோசடி தகவல்களும் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். மக்களும் மறந்து விட்டனர்.

ஆனால் இவர்கள் போன்ற மோசடி பேர்வழிகளுக்கு ஆளும் அரசின் ஆதரவு இருப்பதால் மீடியாக்களும் கண்டுகொள்வதில்லை. உண்மை தெரிந்தாலும் எதற்கு வம்பு என வெளியே சொல்வதில்லை.

கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈஷாவில் தங்கியிருக்கும் பல வெளிநாட்டினரும் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தபோதும், அரசு சரிவர கவனிக்காமல் விட்டதை பலரும் சுட்டிக் காட்டியும் அவர்கள் குறித்து சரிவர சோதனைகளை மேற்கொள்ளவில்லை. இப்போது சென்னைக்கு அடுத்தபடியாக கோவைதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு கவனத்தில் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.

அதுமட்டுமல்லாமல் பல வழக்குகளில் சிக்கிய ஜக்கி வாசுதேவ் குறித்து அரசும், எதிர் கட்சிகளும் வாய் திறக்காதது பெரிய ஆச்சர்யம்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *