தஞ்சாவூர் (30 மார்ச் 2020): தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பாதிப்பு உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை என வி.ஏ.ஓ தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. எனினும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொரோனா பரவாமல் தடுத்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கொரோனா பரவுவதாக சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால் அதிராம்பட்டினத்திற்கு வருகை புரிய அருகில் உள்ள கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். மேலும், அதிரை அரசு மருத்துவமனைக்கும் செவிலியர்கள் வர அச்சப்படுவதாக தெரிகிறது.
இதுகுறித்து விஏஓ தெரிவிக்கையில், “அதிராம்பட்டினத்தில் யாருக்கும் கொரோனா இல்லை. வீணில் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் வெளிநாட்டிலிருந்து வருகை புரிந்தவர்கள் அரசின் கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.