சென்னை (30 மார்ச் 2020): கொரோனா தடுப்புப் பணிக்காக தமிழக அரசுக்கு தொகுதி நிதியிலிருந்து ரூ 1 கோடி வழங்குவதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மேற்கொண்டு வரும், பெருந்தொற்று நோயான கொரோனா தடுப்புப் பணிகளுக்காக, தமது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து, ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையாளருக்கு திரு.டிடிவி தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே, திரு.டிடிவி தினகரன் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் சமூக சேவை அமைப்பான நன்மக்கள் நலச்சங்கம், கொரோனாவைத் தடுப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகளுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் அளித்துள்ளது.