தப்லீக் ஜமாஅத்தினருக்கு கொரோனா பாஸிடிவ் ஆனால் அறிகுறிகள் இல்லை – குழப்பத்தில் மருத்துவத்துறை!

Share this News:

சென்னை (10 ஏப் 2020): டெல்லி தப்லீக் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தப்லீக் ஜமாஅத்தினர் சிலருக்கு கொரோனா பாஸிட்டிவ் என கூறப்பட்டபோதும் யாருக்கும் அறிகுறிகள் இல்லதது மருத்துவத்துறையினரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களில் அதிகமானோர் தப்லீக் ஜமாஅத்தினரே என்று தமிழக சுகாதாரத்துறை தினமும் அளித்து வரும் தகவல்கள் படி தெரிய வருகிறது. அதேவேளை அவர்கள் யாருக்கும் எந்தவித கொரோனா அறிகுறிகளும் காணப்படவில்லை என்பதுதான் மிகபெரிய கேள்விக்குறி.

இது இப்படியிருக்க, இதுகுறித்து நச்சுயிரியல் வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் “இதுகுறித்து வைரஸ் வல்லுநர்களையும், மருத்துவ வல்லுநர்களையும் இணைத்து உயர் மட்ட ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் இதன் மூலம் பாஸிட்டிவ் வந்தவர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என்றும், இந்த ஆரய்ச்சியின் மூலம் இந்திய அளவில் வழிகாட்டவும் வேண்டும்.” என முன்னால் எம்.எல்.ஏ நிஜாமுத்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.


Share this News:

Leave a Reply