தப்லீக் ஜமாஅத் குறித்து வீண் விவாதம் வேண்டாம் – மன்சூர் காஷிபி கோரிக்கை!

Share this News:

சென்னை (10 ஏப் 2020): கொரோனா பாதிக்கப் பட்டவர்களாக கூறப்படும் தப்லீக் ஜமாஅத்தினர் குறித்து சமூக வலைதளங்களில் வீண் விவாதம் வேண்டாம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காஷிபி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்டுள்ள கோரிக்கையில், “தமிழகத்திலிருந்து டெல்லி சென்ற தப்லீக் ஜமாஅத்தினரின் எண்ணிக்கை குறித்து சிலர் சமூக வலைதளங்களில் சந்தேகம் கிளப்பியுள்ளனர். தமிழக அரசு தெளிவாகவே விளக்கம் அளித்து வருகிறது. இதில் சந்தேகிக்க எதுவும் இல்லை.

தமிழகத்திலிருந்து டெல்லி சென்றவர்கள் அல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்ற தமிழக ஜமாஅத்தினரும் இந்த டெல்லி ஜமாஅத் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அஸ்ஸாம் ஆலோசனை கூட்டமும் அங்கு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில்தான் டெல்லி தப்லீக் ஜமாஅத் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்ததால், அங்கு சென்ற அனைத்து மாநில ஜமா அத்தினரும் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப் பட்டனர். அந்த வகையில்தமிழகத்திலிருந்து அங்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் 961 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தமிழக சுகாதாரத்துறை உறுதிபடுத்தியுள்ளது. எனவே இதனை மக்களுக்கு கொண்டு செல்வதோடு, தப்லீக் ஜமாஅத்தில் சென்ற எல்லோருக்கும் கொரோனா இல்லை என்பதை மட்டுமே மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமே தவிர இதில் கணக்கு பார்த்து விவாதம் செய்வது தப்லீக் ஜமாஅத் கொரோனா கேம்பில் ஜமாஅத்தினருக்கு உதவும் நமது தன்னார்வலர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க உதவ வேண்டும்.

கொரோனாவை ஒழிக்க அரசு, மருத்துவர்கள், செவிலியர்கள், அல்லாமல் தன்னார்வலர்களும் ஒட்டுமொத்தமாக போராடி வரும் நிலையில், எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, இவ்விவகாரம் குறித்து விவாதிப்பதால் களத்தில் இறங்கி வேலை செய்பவர்களுக்கு மிகவும் சவாலாக உள்ளது. மேலும் டெல்லி சென்றவர்கள் அனைவருமே தானாக முன் வந்து அரசிற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஆனால் சமூக வலைதளங்களில் பலர் இதுகுறித்து விவாதிக்கும்போது அதில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கும், டெல்லி சென்றவர்களுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு நல்ல செய்தி கொரோனா நெகட்டிவ் ஆக ரிசல்ட் வந்தவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்னும் சிலர் இறுதி சோதனை முடிந்து இரு தினங்களில் வீடுகளுக்கு விரைவில் அனுப்பப் படுவார்கள்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா பாசிட்டிவ் ஆகி தற்போது சிகிச்சைக்குப் பிறகு நெகட்டிவ் என ரிசல்ட் வந்த மேல்விசரத்தை சேர்ந்த நபர் வீட்டுக்கு அனுப்பபடவுள்ளார். அதனை தமிழக அரசு ஒரு விழாவாக கொண்டாடவுள்ளது. மேலும் கொரோனா கேம்பில் உள்ள அனைவரும் விரைவில் வீடு திரும்புவார்கள் அதற்காக பிரார்த்திப்போம். எனவே இதுகுறித்த விவாதங்களை விட்டு விலகியிருப்போம் இதனை பலருக்கும் தெரியப்படுத்துங்கள்”.

இவ்வாறு மன்சூர் காஷிபி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply