சென்னை (29 அக் 2022): முதுகு வலி காரணமாக சிகிச்சை பெற்ற முதல்வர் ஸ்டாலின் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.
மருத்துவ பரிசோதனைக்காக சென்னை பேரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஸ்டாலின் நேற்று இரவு வீடு திரும்பினார். பின்னர் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவர்களின் அறிவுருத்தலின் பேரில், முதல்வர் ஸ்டாலின் நீண்ட பயணங்கள் மேற்கொள்ள இயலாது. எனவே இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி நடைபெறவிருக்கும் முத்துராமலிங்க தேவர் 115 வது பிறந்தநாள் மற்றும் பூஜையில் முதல்வர் பங்கேற்க இயலாத நிலையில், அவர் சார்பாக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, இரா.பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.