பாஜகவின் ரகசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

Share this News:

புதுடெல்லி (29 அக் 2022): தெலங்கானாவில் டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுக்க முயற்சிப்பது தொடர்பான ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முக்கியமான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் நேற்று கைது செய்யப்பட்ட பாஜகவின் புரோக்கர்களில் ஒருவர் எம்.எல்.ஏ.க்களை பாஜகவில் சேருமாறு கேட்பது உள்ளது.

தெலுங்கானா மட்டுமின்றி டெல்லியிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது ஆடியோ பதிவில் தெளிவாக தெரிகிறது என்று சிசோடியா கூறியுள்ளார்.. இது பாஜகவின் குதிரை பேரத்தை நிரூபணமாக்கியுள்ளது என்று சிசோடியா கூறியுள்ளார்.

ஒரு எம்எல்ஏவின் விலை 100 கோடிக்கு பேரம் பேசப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிசோடியா, அப்படியானால், டெல்லியில் மட்டும் 1000 கோடி ரூபாய்க்கு மேல் தேவைப்படும் என்றும், இந்தத் தொகையை பாஜக எப்படி கிடைக்கும்? என்றும் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த “ஆடியோ பதிவில், டிஆர்எஸ் எம்எல்ஏ ஒருவரை பாஜகவில் சேருமாறு பாஜக தரகர் கேட்பது கேட்கிறது. இதுமட்டுமின்றி 43 டெல்லி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி நடப்பதாகவும், இதற்காக பணம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும் அந்த ஆடியோவில் பாஜகவில் இணைந்தால், சிபிஐ, இடி போன்ற மத்திய அமைப்புகளின் விசாரணைக்கு பயப்பட வேண்டாம் என்றும், அவர்கள் அனைவரும் எங்கள் மக்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள பண்ணை வீட்டில் நடந்த சோதனையில் நேற்று கைது செய்யப்பட்ட ராமச்சந்திர பாரதியுடன் , 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தெலுங்கானாவில் நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தலுக்குப் பிறகு பல டிஆர்எஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் சேருவார்கள் என்று தலைவர்கள் கூறியிருந்தனர். ஆனால், நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாநிலத் தலைவர்கள் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சிக்கவில்லை என்றும் வாதத்தை முன்வைத்தனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஆடியோ இந்த வாதங்களையெல்லாம் தகர்க்கும் விதமாக உள்ளது.


Share this News:

Leave a Reply