திருவொற்றியூர்-குடியாத்தம் தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை. தேர்தல் ஆணையம் கைவிரிப்பு!

ECI
Share this News:

தில்லி (24ஜூலை,2020):கொரோனா தொற்று பேரிடர் நெருக்கடியின் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டது.

Titruvottriyur
Titruvottriyur

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் பிப்ரவரி 28-ஆம் தேதி குடியாத்தம் தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகிய இருவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்கள். இந்த தொகுதிகளுக்கு தேர்தல் ஆணைய விதிப்படி 6 மாத காலத்திற்குள் அதாவது, ஆகஸ்ட் 26 இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி, ஆகஸ்ட் 26,27 தேதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான காலம் முடிகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மாநிலங்கள் அனைத்தும் கொரோனா நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால், தேர்தல் நடத்த தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் படுத்துதல், தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாது. எனவே, தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு செப்டம்பர் 7 வரை இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை கொரோனா பேரிடர் காரணமாகவும், சில மாநிலங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு காரணமாகவும் இடைத்தேர்தல் நடத்த இயலாத சூழல் உள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply