இஸ்லாமாபாத் (28 மார்ச் 2020): பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
உலகை புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் காட்டிலும் அதுகுறித்த வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு வதந்தி பரவியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இம்ரான் கான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. எனவே போலி செய்தியை யாரும் நம்ப வேண்டாம். எல்லோரும் உடல் நலம் பெற்று வாழ இறைவன் அருள் புரியட்டும்” என்று தெரிவித்துள்ளது.