தூத்துக்குடி (14 ஜூலை 2020): சாத்தான் குளம் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளது சி.பி.ஐ..
சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை சிபிசிஐடி காவல்துறை கொலை வழக்காக பதிவு செய்திருந்தது. வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கை கொலை வழக்காக சி.பி.ஐ மாற்றியுள்ளது.
மேலும் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், 4-ம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் தடயங்களை அழித்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் பெயரை சிபிஐ சேர்த்துள்ளது.