நிர்பயா வழக்கில் திடீர் திருப்பம் – தள்ளிப் போகுமா தூக்குத் தண்டனை?

Share this News:

புதுடெல்லி (28 ஜன 2020): நிர்பயா வழக்கின் திடீர் திருப்பமாக சிறையில் தூக்குத் தண்டனை குற்றவாளி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக புதிய மனு நீதிமன்றத்தில் அளிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தரப்பில் இருந்து இதுவரை தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள், கருணை மனுக்கள் ஆகிய அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூக்குத் தண்டனையை நிறுத்த குற்றவாளிகள் தரப்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இது இப்படியிருக்க குற்றவாளி முகேஷ் சிங் தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் தூக்குத் தண்டனையை குறைக்க வேண்டி முறையிடப் பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர்.பானுமதி, அசோக் பூஷன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞராக சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் குற்றவாளி தரப்பில் ஏ.பி.சிங்கும் வாதாடினர்

அபோது குற்றவாளி முகேஷ் சிங் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.பி.சிங், குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவில் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை, முகேஷ் சிங் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டார், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்டார். என வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை தீர்ப்பளிப்பதாக உத்தரவிட்டனர்.


Share this News:

Leave a Reply