சென்னை (04 ஜூலை 2021): மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ”தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும்.
யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறியதை வைத்து ஒன்றிய அரசு என கூறுவதில் நியாயம் இல்லை. இந்திய நாடு பிரிக்கப்பட முடியாத ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தேசம் என்பதை யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ் உணர்த்துகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.