துணை முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ரஜினி!

Share this News:

சென்னை (22 ஜன 2019): தந்தை பெரியார் குறித்து முழுமையாக தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை உடையில்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரினர். ஆனால் ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது, ” பெரியார் குறித்து தெரிந்து பேச வேண்டும். பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்க வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைவதற்கு பெரியாரே காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கானவே அமைச்சர் ஜெயக்குமாரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply