அந்த இருமல் சத்தத்தை கொஞ்சம் நிறுத்துங்கப்பா – நீதிமன்றத்தை தெறிக்கவிட்ட வழக்கு!

Share this News:

சென்னை (12 மார்ச் 2020): கொரோனா வைரஸ் வந்தது ஒருபுறம் என்றால் அதுகுறித்த விழிப்புணர்வுகளும் தெறிக்க விடுகின்றன.

கரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக் கொள்வது எவ்வாறு என்றொரு பிரச்சாரத்தை மொபைல் போன் மூலம் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

இந்தப் பிரசாரமே பெருந்தொல்லையாக மாறிக்கொண்டிருக்கிறது. மொபைல் போனில் ஒருவரை அழைத்ததும் ஒரு பெரிய இருமலுடன் தொடங்கி, பதிவு செய்யப்பட்ட ஒரு பெண்ணின் குரல் வெகுவேகமாக கரோனா பரவலில் தற்காத்துக் கொள்வது பற்றி ஒலிக்கிறது.

பெரும்பாலான மொபைல் போன் எண்களைத் தொடர்புகொண்டால், எடுத்தவுடனே இருமல் சப்தம்தான் கேட்கிறது. சம்பந்தப்பட்டவர் அழைப்பை எடுத்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. தொடர்ந்து வேற்று மொழியில் பேசுவதால் தவறான எண்ணுக்குத்தான் தொடர்புகொண்டுவிட்டோமோ என்று அஞ்சித் துண்டிக்க நேரிடுகிறது என்று பயனீட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் கரோனா விழிப்புணர்வுக்காக இருமல் சத்துடன் உருவாக்கப்பட்டுள்ள காலர் ட்யூனை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜசேகரன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் , ‘இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரத்தால் ஆரோக்கியமான நபரும் உடல்நலக்குறைவு ஏற்படும் மனநிலைக்கு தள்ளப்படுவதாகவும் , குறிப்பிட்ட காலர் ட்யூன் எரிச்சல் ஊட்டும் வகையில் இருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply