சென்னை (23 ஜூன் 2021): தமிழகத்தின் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ கேள்விக்கு, தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் விலை குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார்.
2006-2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலகட்டத்தில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்த போதும், தமிழகத்தில் மூன்று முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை கலைஞர் குறைத்தார்.மத்திய அரசு பல மடங்கு வரை உயர்த்தியதால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.கச்சா எண்ணெய் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளது . ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 75 டாலரைத் தாண்டியுள்ளது சுட்டிக்காட்டி தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.