மதுரை (29 ஜன 2020): மதுரையில் மளிகைக் கடைக்காரரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு மேலும் பெட்ரோல் குண்டைவ்யும் வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அனுப்பானடி சின்னகன்மாய் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவரது மளிகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, கடைக்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியுள்ளது.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகத்தின் பேரில் சிலரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.